Friday, February 14, 2014

கயா ச்ராத்தம்(
(சர்மா சாஸ்திரிகளின் ‘வேதமும் பண்பாடும்’ நூலிலிருந்து ஒரு பக்கம்)

கயா. இந்த பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே நம்முள் ஒரு பக்தி கலந்த பெருமையுணர்வும், உத்வேகமும் ஏற்படுகின்றது என்றால் மிகையாகாது. தாய், தந்தை மறைந்த பிறகு, வாழ்க்கையில் ஒரு தடவையாவது, கயா சென்று ச்ராத்தாதிகளை செய்வது புத்ரனின் கடமை. கயா ச்ராத்தம் பித்ருகளுக்கு பேரானந்தத்தையும், திருப்தியும் அளிப்பது மட்டுமல்லாமல் ஈடுபடும் கர்த்தாவின் குடும்பத்திற்கும் ச்ரேயஸ் உண்டாகிறது.

ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய
(புத்ரனின் கடமை என்னவென்று சாஸ்த்ரங்கள் கூறும்
போது, தாய்தந்தை சொற்படி நட, அவர்கள் இறந்தபின் அவர்களுக்கு வருஷா வருஷம் குறிப்பிட்ட திதியில் ச்ராத்தம் (ப்ரத்யாப்திகம்) முறையாக செய், கயாவிற்கு சென்று அவர்களுக்கு பிண்ட ப்ரதானம் செய், இந்த மூன்றும் எவன் செய்கின்றானோ அவன்தான் புத்ரன் என்று வலியுறுத்துகின்றன).

இந்த கயை எங்கே இருக்கிறது?
பீகார் மாநிலத்தில் உள்ளது. விந்திய மலைச் சாரலுக்கு வடக்கே மகத நாட்டிலே சம்பகம் என்னும் பெயர் கொண்ட இன்பத் தேன் பாயும் மது வனத்திலே ஆனந்த மலையெனத் திகழும் கோலாகல பர்வதத்திலே இந்தத் திருத்தலம் இருக்கிறது. இங்கே இறைவன் கதாதரராகத் கொலு வீற்றிருக்கிறார்.

கயா ச்ராத்தம் எனும் பொழுது அதில் என்னவெல்லாம் அடங்கும். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற கேள்வி கனைகளும் ஆர்வமும் நமக்கு ஏற்படுவது இயற்கையே. கயாவில் குறைந்தது, இரண்டு ஹிரண்ய ச்ராத்தம், ஒரு பார்வண ச்ராத்தம் செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட முறையானது தற்காலத்தில் வழக்கத்தில் உள்ள முறை. மேலும் சாஸ்த்ரமாக செய்ய நினைப்போருக்கு வேறு விதி உள்ளது. அதற்கு குறைந்தது கயாவில் 6 நாட்களாவது தங்க நேரிடும்.

1. பல்குனி நதி: முதலில் இந்த நதிக்கரைக்குச் சென்று நதி நீரை எடுத்து வந்து கரையிலேயே நமது ஸ்திரீகள் ஹவிஸ் வைக்க வேண்டும். அதற்கு அங்கிருப்பவர்கள் நமக்கு உதவி புரிவார்கள். அந்த அன்னத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து மனைவி 17 பிண்டங்கள் பிடிக்க நதிக்கரையிலேயே சங்கல்ப மந்திரங்களுடன் பிண்ட பிரதானம் செய்ய வேண்டும். பிறகு அவற்றை யதாஸ்தானம் செய்துவிட்டு அந்த பிண்டங்களை அங்கேயே பசுமாட்டிற்கு அளிப்பது மரபு.

2. விஷ்ணு பாதம்: ஞாபகமிருக்கின்றதா இல்லத்தில் நாம் செய்யும் ச்ராத்தத்தில் ....விஷ்ணு பாதாதி சமஸ்த பாதேஷ¨ தத்தம் என்று பிராம்மண போஜன சமயத்தில் வருகின்ற அந்த ச்ரேஷ்டமான விஷ்ணு பாதத்தில்தான் நாம் அடுத்து பிண்டபிரதானம் செய்கின்றோம். பல்குனி நதியில் சமைத்த ஹவிஸின் மீதி பகுதியில் இப்போது 64 பிண்டங்கள் பிடிக்க வேண்டும். சங்கல்ப மந்திரங்களுடன் பிண்ட பிரதானம். பிறகு இந்த பிண்டங்களை நாமே நமது கையால் எங்கு போடுகிறோம் தெரியுமா? நமது பாக்யம்; விஷ்ணு பாதத்தில் நேரிடையாக நாம் இந்த பிண்டங்களை சேர்க்கின்றோம். உடல், மனம் எல்லாம் ஒன்று சேர அப்போது நாம் அடைகின்ற மனதிருப்தி உள்ளதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

3. பார்வண ச்ராத்தம் : விஷ்ணு பாத ஆலயத்தில் மேலே குறிப்பிட்ட காரியங்களை முடித்துக் கொண்டு நாம் தங்கியிருக்கும் இடத்திற்கு வருகிறோம். கயாவில் இந்த மாதிரி வசதியுள்ள இடங்கள் நிறைய உண்டு. நாங்கள் தங்கிய இடத்தின் பெயர் கர்நாடக பவன்.

‘கயாவாலி’ ப்ராம்மணர்கள்:
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். நாம் செய்யும் ச்ராத்தத்தில் பங்கு பெற்று சாப்பிட வரும் கயாவாலி என்று அழைக்கப்படும் ப்ராம்மணர்கள் அனேகமாக நித்ய போக்தாக்கள் தான். (கயாவில் தினமும் ச்ராத்த போஜனம் சாப்பிடும் தோஷம் இல்லை).

ஆனால் அவர்கள் முகத்தில் காணப்படும் தேஜஸ் இருக்கின்றதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பார்த்துதான் அனுபவிக்க வேண்டும். ஆகா என்ன தேஜஸ் அவர்கள் முகத்தில்! அங்கு ஹோமத்துடன் கூடிய ச்ராத்தம் நடைபெறும். மொத்தம் 5 பிராம்மணாளை வரித்து ச்ராத்தம். ச்ராத்தம் முடிந்தவுடன் மீண்டும் 64 பிண்டங்களை ஹோமசேஷ அன்னத்தில் பிடிக்க வேண்டும். அதை எங்கு எடுத்துச் செல்ல வேண்டும் தெரியுமா? அக்ஷயவடத்திற்கு!

4. அக்ஷய வடம்: வருஷா வருஷம் நாம் செய்யும் ச்ராத்தத்தில் பிராம்மண போஜன நமஸ்கார கட்டத்தில் “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று கூறுவோம் அல்லவா? அந்த அக்ஷய வடத்திற்குதான் நாம் 64 பிண்டங்களை எடுத்துச் செல்லுகிறோம்.

மாத்ரு ஷோடஸி ஸ்லோகமும் அர்த்தமும்:
அக்ஷய வடம் என்பது ஒரு பிரமாண்டமான வ்ருக்ஷம். ஆல மரமாகும். இதன் நிழலில் நாம் பிண்ட பிரதானம் செய்கின்றோம். மிகவும் விசேஷம். 64 பிண்டங்களில் அம்மாவிற்கு மட்டும் 16 பிண்டங்களை வைக்கிறோம். இதற்கு “மாத்ரு ஷோடஸி” என்றும் கூறுவர்.

இந்த 16 ஸ்லோகங்களைச் சொல்லி தனது தாயாருக்கு 16 பிண்ட பிரதானம் செய்ய வேண்டும்.
15-02-14 SATURDAY
தினம் ஒரு ஆன்மிக சிந்தனை ஆன்மிக தகவல்கள்
DAILY ONE RELIGIOUS THOUGH & INFORMATION
Masi Maham festival மாசி மகம் சிறப்பு
1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.

2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.

3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.

4. சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.

5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.

6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.

7. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.

10. உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.

12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.

13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.

14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.

15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

16. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.

17. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.

18. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

19. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

20. மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.
1 The incarnation of Lord Vishnu took in February makattirunal. 2.February cankatahara Chaturthi is very special. தோஷங்களிலிருந்தும் freed of all those who are fasting on that day. 3. Feb matattanru the Parvati River kalinti dextral Chung appeared on a lotus flower. 4. Mr. Siva macimatat realized in a number of sport. 5. Getting cirantatakat Feb matattanru considered magical doctrine. 6. Kulasekara Alwar Punarvasu star day he was born in February. 7. Annatanat is to show the greatness of the Week Feb. 8. Lord Muruga is the star of the day, the month of February up to the mountain of the Lord Shiva, his father taught. 9. Pirammahatti narkati such great sins of the devil will spend two Ekadasis coming in February. 10. Those who want to do research on those who want to study in high macimaka them become the beginning. 11. The sage said that he wishes to macimatat grace is received. 12. Savitri Vrata fast karataiyan the special month of fasting. Makattanrutan kamatakan Festival takes place in February. 13. Stand in February if the house was rented house live at the house most days. So this month to elect a new home kirakappiravecam. 14.In this month, also referred to as the nuptial. 15. Masi Masi Maga star birth is alvar people succumb to the proverbial thread moss. Women in this new string to tie the nuptial better off. 16. Disability Feb niratal children to read the Holy macimaka myth. Or ask the punniyame. 17. Feb makattanru Nellaiappar temple festival coming to Tirunavukkarasar make porramarai resolved. The name of the Upper barge. 18. Kulittap up in the early hours of February basil worship the Lord, to have a place in Vaikunta. 19. Macimaka day to worship the deity arccittu vermillion, will find joy and success. 20. In February sricarasvati Devi Shukla Panchami decorated with fragrant flowers of all, to become educated.

Monday, February 10, 2014

திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது நினைவில் கொள்ளவேண்டியவை..

1. மாப்பிள்ளை பார்க்கும் போது, இன்னதை எல்லாம் தாருங்கள் என பட்டியல் இடுவோரை துளியும் யோசிக்காமல் ஒதுக்கிடுங்கள். என்ன கேட்டாலும், நிலம் விற்று, கடன் வாங்கி பாடாய் பட்டேனும் கேட்டதைக் கொடுத்து திருமணம் செய்து வைப்பேன் என்ற நினைப்பை தவிர்த்திடுங்கள். அப்படி கடினப்பட்டு செய்வதெல்லாம் ஓர் நாள் நிகழ்வுக்கு தான். பெண்ணுக்குத் தானே தருகிறோம் மகிழ்ச்சியாய் இருப்பாள் என்ற கனவு பொய்த்த பின் அழது பிரோஜனம் இல்லை. மனம் பணத்தை விரும்பும் இடத்தில் மகிழ்ச்சி நிரந்தரமாய் இருக்காது.

2. சில நல்ல எண்ணம் கொண்டவர்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லை, நீங்கள் முடிந்ததைச் செய்யுங்கள் இல்லையெனினும் குறையில்லை என்றால், உடனே
" இந்த மாப்பிள்ளைக்கு ஏதோ குறை, அது தான் எதுவுமே வேண்டாம் என்கிறார்" என தப்புக் கணக்கு போடாதீர்கள். எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நலமே. அதற்காக, இந்த ஒரே காரணத்திற்காக சந்தேகம் கொள்வது தவறு. மாப்பிள்ளையை நன்றாக விசாரியுங்கள். அதில் தவறில்லை. எதற்காக இவர் ஒன்றும் வேண்டாம் என்கிறார் என்று விசாரிக்காதீர்கள். அந்த ஒரு கண் கொண்டு மட்டுமே விசாரித்தால் நீங்கள் நல்ல வரனை இழக்க கூடும்.

3. வாழ்க்கைத் துணைவி இந்த நடிகையைப் போல் அழகாய் இருக்க வேண்டும் என்பதை விட அவள் என்னுடன் வாழப்போகும் காலத்தில் ஓர்நாள் கூட என்னிடம் நடிக்காதவளாய் இருக்க வேண்டும் என்று ஆண்கள் எண்ணுவதே நலம்.

4. பெண்களும் வாழ்க்கை துணை இந்த நடிகனைப் போல் இருக்க வேண்டும் என ஒரு போதும் எண்ணாமல் இருத்தல் நலம். அப்புறம் உங்களுக்கு ஆபத்து என்றால் சண்டை போட டூப் தேட வேண்டியிருக்கும். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் துணையாய் இருப்பவரே வாழ்க்கை துணை என்பதை நம்புங்கள்.

5. படித்தவர் துணையாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தவறில்லை. ஆனால் பொறியியல் மட்டுமே படித்திருக்க வேண்டும் கணியில் செய்யும் மென்பொருள் வேலை மட்டுமே நல்ல தொழில் என்று எதிர்பார்ப்பது தவறே. எவ்வளவு பணம் கட்டியாவது பொறியியல் படிக்கவேண்டும் என்ற நிலைமை ஒரு புறம் இருக்க, எவ்வளவு கொடுத்தேனும் பொறியியல் துறை மாப்பிள்ளையை பிடிக்க வேண்டும் என்பது இன்னொரு பக்கம் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.

6. ஆண் வீட்டாரோ, பெண் வீட்டாரோ பார்த்த வரன் பிடித்திருக்கா இல்லையா என்பதை நேரமாய் நேர்மையாய் சொல்லி விடுங்கள். அதில் யாருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. இன்று சொல்கிறேன், நாளை சொல்கிறேன். இப்ப பிடிச்சிருக்கு ஆனா மேற்கொண்டு அப்புறம் பேசலாம் என்று ஜவ்வு மாறி இழுத்து அடுத்தவர் மனதில் தேவையற்ற எதிர்பார்ப்புகளை விதைத்து அவர்களை துன்புறுத்தாதீர்கள்.

எந்த அளவுக்கு இன்று மணமுறிவுகள் அதிகம் இருக்கோ அதே அளவிற்கு மனங்கள் இணையும் திருமணமும் கடினமாகத் தான் இருக்கிறது. இந்த ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டின் 7.4 கோடி மக்கள் தொகையில் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற நல்ல நிலையில் தான் இருக்கிறது. இருந்தும் இங்கு பலருக்கு பல வருடங்கள் தேடினாலும் நல்ல வரன் அமைவதில்லை.

எல்லாவற்றிற்கும் காரணம் தேவையற்ற எதிர்பார்ப்புகளே. உங்களின் அதிக பட்ச எதிர்ப்பார்ப்பாக நல்ல மனதையும், குணத்தையும் கொள்ளுங்கள்.

எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால், இனிதாய் ஓர் இல்லறம் அமைந்துவிடும்.

இரு மனங்கள் இணைந்தால் மட்டுமே அது திருமணம். மான்யங்கள் கொண்டு விலைபேசப்பட்டால் அது வெறும் மணமே!


கல்யாணமும் யதார்த்தமும்:
கல்யாணம் வந்து விட்டால் எல்லா இல்லங்களிலும் தற்காலத்தில் உடனே என்னென்ன வேலைகள் என ஞாபகத்திற்கு கொண்டு வந்து அவைகளை பட்டியல் போடுவார்கள் என்று யோசித்தால் அவைகள் அனேகமாக இவைகளாகத்தான் இருக்கும்:

* மண்டபம் தேடி முடிவு செய்வது
* சமையல்காரர் அல்லது கேட்டரிங் காண்டிராக்டரை செலெக்க்ஷன் மற்றும் ‘மெணு’ முடிவு செய்வது
* ஃபோட்டோ, வீடியோ, மைக் செட் முதலியவைகளுக்கு ஏற்பாடு செய்வது
* மண்டபத்தை அலங்கரிக்க வேண்டாமா, அதற்காக ‘டிஷ்கஷன்’ செய்வது
* பத்திரிகை டிசைனுக்காக அலைந்து அலைந்து தேர்ந்தெடுப்பது
* மேளத்தாளம் ஏற்பாடு
* முகூர்த்த பை எப்படி இருக்க வேண்டும் அதில் என்ன ‘கிஃப்ட்’ இடம் பெறலாம் என திட்டமிடுவது
* ரிசப்ஷனுக்கு ‘ம்யூசிக் ட்ரூப்பை’ ‘புக்’ செய்வது
* மணப்பெண் அலங்காரத்திற்காக ‘ப்யூட்டி பார்லரை’ தேர்வு செய்வது
* ‘மெஹந்தி’ நிகழ்ச்சிக்காக ‘நார்த் இண்டியன் ஸ்டைலில்’ ஏற்பாடு செய்வது

அப்பப்பா, இத்யாதிககளை பற்றிதான் ’டிஷ்கஷன்ஸ்’ ஓடிகொண்டே இருக்கும்.

இந்த ஏற்பாடுகள் எல்லாம் தேவையில்லையா என்றால் தேவைதான்.

பத்திரிகை மூலம் அழைப்பு விடுப்பது, வந்தவர்களை உபசரிக்க எண்ணுவது போன்றவைகள் அவசியம்தான்.

ஆனால் இவற்றின் பேரில் நடக்கும் ‘தமாஷ்’களை என்னவென்று சொல்லுவது.

அழைப்பிதழ்:
இவர்கள் பத்திரிகை டிசைன் செய்யும் போக்கை பார்த்தால் ‘இவர்கள் ஏதோ நமது கலாசாரத்தில் மிகவும் ச்ரத்தை’ உள்ளவர்கள் போல் நமக்கு தோன்றும். பண்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர்கள் போல தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக வாசகங்களையும் பத்திரிகையின் அமைப்பையும் தேர்ந்தெடுப்பார்கள். கல்யாண சடங்குகளின் முக்கியத்துவத்தை பலருக்கு தெரிவிக்க வேண்டுமாம்.

ஆனால் யதார்த்தத்தில் கல்யாணத்திற்கு வரும்போதுதான் சாயம் வெளுக்கும். நமது கலாச்சாரத்திற்கும் அங்கு காணும் காட்சிகளுக்கும் சம்பந்தமே இருக்காது. அங்கு உடை, நடை, எல்லாமே நாம் ஏதோ ஒரு ’சோஷல் ஈவென்டுக்கு’’ வந்த மாதிரிதான் தோன்றும்.

உணவு வகைகளும் மற்ற விஷயங்களும்:
அடுத்து உணவு விஷயத்துக்கு வருவோம். வந்தவர்களை உபசரிக்க வேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியுமா; இருக்க முடியாதுதான். அதற்காக இன்று பலர் அடிக்கும் கூத்து இருக்கின்றதே அதை என்னவென்று சொல்லுவது?

உதாரணத்திற்கு ரிசப்ஷன் சாப்பாட்டில் எக்கச்சக்கமான, கணக்கற்ற, அயிட்டங்களை சேர்ப்பார்கள். அங்கு வீணடிக்கும் பொருட்களின் எண்ணிக்கையையும். அளவையும் பார்த்தால் பல கேள்விகள் மனதில் தோன்றுவது இயற்கைதான்.

மண்டப வாசலில் பலூன், பஞ்சு மிட்டாய், பேல்பூரி, பாவ் மசாலா போன்ற ஸ்டால்கள் என கூட்டி பார்த்தால் பல லக்ஷ கணக்கில் பட்ஜெட். மண்டப வாடகைக்கான செலவு கேட்கவே வேண்டாம்.

இவையெல்லாம் இன்று ஸ்டேடஸ் சிம்பல்.

மெஹந்தி: இந்த ‘மெஹந்தி-ப்ரோக்ராம்’ எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. ‘மிடில் க்ளாஸ்’ என்ற நிலையில் இருப்பவர்கள்கூட இப்போதெல்லாம் இதற்கு முக்கியத்துவம் தர அரம்பித்துவிட்டனர். இதற்கு ஆகும் பட்ஜெட்டை கேட்டால் தலையை சுற்றும். இந்த இடத்தில் யாராவது மருதானி போதுமே என்று சொல்ல ஆரம்பித்தால் அவர்கள் வாயை பொத்தி விடுவார்கள்.

யதார்த்த நிலமை:
இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆடம்பரத்திற்காகவும், மேற்கத்திய சிந்தனை ஊறிபோனதனால் அதற்கேற்ப வேஷம் போடுவதும்தான் இப்போதெல்லாம் பல கல்யாணங்களில் பார்க்க முடிகின்றது.
இவற்றையெல்லாம் மிகவும் ஜக்கிரதையாகவும், பெரிய அளவிலும் ஏஏற்பாடு செய்ய நினைப்பவர்கள், நமது கலாச்சாரத்தில் விவாஹத்தின் தார்மீக பின்னணி, நோக்கம் என்ன, இதில் வைதீக அம்சங்களின் பங்கு என்ன என்று யோசிப்பார்களா என்றால், யோசிக்கவே மாட்டார்கள் என்று சொல்ல மாட்டேன்.

இந்த ‘யோசனை’ எப்படி இருக்கும் தெரியுமா?

ஏதோ "அதுவும்(also)கல்யாணத்தில் உண்டு” என்பதுபோல் வாத்யாரை அழைத்து அவரிடம் “பேரம்” பேசி டக்-டக்கென்று விஷயத்தை முடிவு செய்து விடுவார்கள்.

மாறாக வாத்யாரிடம் உட்கார்ந்து வைதீக சடங்குகளை எப்படி மிகவும் சிறப்பாக செய்யலாம், அதற்கு என்னவெல்லாம் ’பிரபெரேஷன்’ செய்ய வேண்டும், தர்மம் எது, எதிலெல்லாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வெண்டும் என்று விவாதிப்பார்களா என்றால் கப்சிப். மற்ற விஷயங்களுக்கு தருகிர முக்கியத்துவத்தில் இதில் ஒரு சிறு துளிதான் ’இண்ட்ரெஸ்ட்’ இருக்கும்.

அப்பா அம்மாவுக்கும் அக்கறை இருக்காது, பையணுக்கும் அதை பற்றியெல்லாம் கவலை இல்லை.. வைதீக கார்யங்கள் நடைபெறும்போது ஏதோ ‘கடனே’ என்று கல்யாண மாப்பிள்ளை நடந்துக்கொள்ளுவான். அவன் என்ன செய்வான்? அவனுக்கு எடுத்துச் சொல்ல ஆள் இல்லையெ. இதுதான் இன்று பரவலாக நடபெறுகின்றது.

இதையெல்லாம் இல்லத்தில் இருக்கும் ஒரிரு வயதானவர்கள் பார்த்தும் ஒன்றும் செய்ய இயலாமல் ‘நமக்கேன் வம்பு’ என்று சும்மா இருந்து விடுகின்றனர். பாவம், அவர்களால் என்ன செய்ய முடியும்?

நமக்கு விதிக்கப்பட்டுள்ள சம்ஸ்காரங்களில் விவாஹம் ஒன்று என்று சிந்தனை இருக்க வேண்டாமா? இதை ஒரு “சோஷல் ஃபன்க்‌ஷனாக” மாத்திரம் பார்க்காமல் கூடியமானவரையில் சாஸ்த்ரோக்தமாக நடத்த எண்ண வேண்டாமா?

பகவானை ப்ரார்த்திப்போம்:
ஆனால் ஒன்று. இன்றும் ஒரு சிலர் விதிப்படி சாஸ்த்ரோக்தமாக கல்யாணத்தை நடத்த எண்ணுவது உற்சாகத்தையும், நம்பிக்கையும் அளிக்கின்றது. இரண்டு நாள் கல்யாணமோ அல்லது நாலு நாள் கல்யாணமோ முடிந்தவரையில் விதிப்படி விவாஹத்தில் வைதீக கார்யங்களை ஆசாரத்துடன் நடத்துவதில் ஆங்காங்கு ஒரு சிலர் விடாப்பிடியாக இருந்து வருகின்றனர்.

இவர்களது எண்ணிக்கை பெருக பகவானை ப்ரார்த்திப்போம்.

Courtesy -- Shri சர்மா சாஸ்திரிகள் - with thanks


காகத்திற்கு அன்னமிடுவது ஏன்?

சனி பகவானின் வாகனம்... காகம். நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இது ஏன் தெரியுமா?
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம். அதுபோல, பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது.
காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.
நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் பூலோகம் வருவதாக நம்பிக்கை. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே காகத்திற்கு தினசரி உணவிடுகிறோம்.
காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பதும் நம்பிக்கை.
சனீஸ்வர பகவானின் வாகனம்தான் காகம் என்பதால், அதற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களில் இருந்து நாம் விடுபடலாம். அதேநேரம், இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம்.
இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை `ஆகாயத்தோட்டி' என்றும் அழைப்பார்கள். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும், இந்த பறவை இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் அதற்கு உணவிடும் பழக்கம் வந்ததாக சொல்வார்கள்.
காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம்.


நல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி?

நல்ல நேரம் பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…….

சுபம் செய்யும் அன்றைய நாள் கரிநாளாக இருக்கக்கூடாது.

திதியில் அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்க்க வேண்டும்.

யோகம் மரணயோக வேளையாக இல்லாமல் சித்த, அமிர்த யோகமாக இருக்கவேண்டும்.

ஓரைகளில் சூரியன், செவ்வாய், சனி ஓரை இல்லாமல் பிற ஓரைகள் வரவேண்டும்.

பஞ்சகங்களில் பொதுவாக அக்கினிஸ சோர, ரோக பஞ்சகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.

முக்கியமாகக் கீழ்க்கண்ட பஞ்சகங்களில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியவை

அக்கினி, சோர, ரோக பஞ்சகங்கள்
திருமணம், சீமந்தம், புதுமனை கோல, குடிபோக.

மிருத்யு பஞ்சகம்
பங்குத் தொழில், லிமிடெட் கம்பெனி போன்ற தொழில்கள் ஆரம்பிக்கக் கூடாது.

அக்னி பஞ்சகம்
பஞ்சு, பெட்ரோல் பொருள்கள், நூல், துணி வகைகள் மற்றும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் தொடங்கக்கூடாது.

இராஜ பஞ்சகம்
அரசு வங்கி மற்றும் பொது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி நடத்தும் தொழில் தொடங்கக் கூடாது.

நிஷ் பஞ்சகங்கள் மிக்க சுபம்.

இராகு காலம், எமகண்டம் நேரங்கள் இருக்கக் கூடாது.

கெளரி பஞ்சாங்கத்தில் ரோக, சோர விஷ காலங்கள் இருக்கக் கூடாது.

முக்கியமாக அந்த நட்சத்திரக்காரருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டிர தினமாக இருக்கக்கூடாது.

மேற்கண்டவற்றை அந்தந்த தேதி மற்றும் ஊர்களின் உதய நேரத்தை அனுசரித்து கணித்துக் கொள்ளவும்.